கள்ள ஓட்டுப் போட்டால் கம்பி எண்ண வேண்டும்
சென்னை:
ஆள் மாறாட்டம் செய்து கள்ள ஓட்டுப்போட முயல்பவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்றுதலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் சாரங்கி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் வரும் 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பல புதிய முறைகள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வாக்காளர்கள் அடையாள அட்டை வைத்துத்தான் ஓட்டுப்போட முடியும்.
அடையாள அட்டை இல்லாதவர்கள், தங்களிடம் உள்ள வேறு அடையாளங்களைக் காட்டி வாக்களிக்கலாம். இந்தமுறை தமிழகத்தில் அனைத்து தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது மிகவும் எளிதான காரியமாகும். வாக்குப்பதிவுஇயந்திரத்தின் இடது புறத்தில் வாக்காளர்களின் பெயரும், சின்னமும் இருக்கும். சம்பந்தப்பட்ட சின்னத்துக்குஎதிரே நீல நிற பட்டன்கள் இருக்கும்.
வாக்குப்பதிவு இயந்திரம் ஓட்டுப்போடும் வகையில் தயாராக உள்ளதா என்பதை இயந்திரத்தின் இடது புறத்தில்உள்ள பச்சை விளக்கு எரிவதன் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
பச்சை விளக்கு எரிந்ததும், பொதுமக்கள் தாங்கள் ஓட்டுப்போட வேண்டிய வேட்பாளரின் பெயரின் அருகேஉள்ள நீல நிற பட்டனை அழுத்த வேண்டும். அப்போது பீப் பீப் என்ற ஒலி கேட்கும். உடனடியாக பொதுமக்கள்போட்ட வாக்கு பதிவாகிவிடும்.
இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன் படுத்தப்படுவதால் செல்லாத ஓட்டுக்களே இருக்காது.அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் யாரும் ஆள் மாறாட்டம் செய்ய முடியாது.
அதையும் மீறி கள்ள ஓட்டுப் போட யாராவது முயன்றால் அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்என்றார் சாரங்கி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications