இலங்கையில் 15 ம் தேதி சமரசப்பேச்சுவார்த்தை: நார்வே
கொழும்பு:
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இந்த மாதம் 15 க்குள் சமரசப் பேச்சுவார்த்தைதொடங்கும் என்று நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் தெரிவித்தார்.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையேதொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இந்தத் தாக்குதலில் பலர் உயிரிழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் வகையிலும், சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும்நார்வே மற்றும் கனடா நாட்டுத் தூதர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, பலமுறை இலங்கைக்கு வந்து, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவு தலைவர்தமிழ்ச்செல்வன், அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் நார்வே தூதர் எரிக்சோல்ஹெம்.
அவர் கடந்த வாரமும் இலங்கைக்கு வந்து அதிபர் சந்திரிகாவையும், புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்தித்துப்பேசினார்.
அவர் கூறுகையில், இலங்கை இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இரு தரப்பினரிடமும்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த மாதம் 15 ம் தேதிக்குள் சமரசப்பேச்சுவார்த்தை தொடங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
பேச்சுவார்த்தை எங்கு, எப்போது நடக்கும்? பேச்சுவார்த்தையில் யார் யார் பங்கேற்பார்கள் போன்ற தகவல்களைஅவர் கூறவில்லை.
இந்நிலையில், சமரச பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமானால், இலங்கை அரசு சண்டை நிறுத்தம் அறிவிக்கவேண்டும். புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications