காலையிலேயே ஓட்டுப் போடுங்கள்: தேர்தல் ஆணையம்
சென்னை:
மே 10 ஆம் தேதி தேர்தலில் காலையிலேயே வாக்களித்து விடுங்கள் என்று தேர்தல் ஆணையம் வாக்காளர்களைக்கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
மே 10 ம் தேதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும்.
மாலை 4 மணிக்கு அல்லது அதற்கு முன்பாக வரும் வாக்காளர்களுக்கு, வாக்குச் சாவடி தலைமை அதிகாரி ஒருசீட்டு கொடுப்பார்.
4 மணிக்கு மேல் வரும் வாக்காளர்களுக்கு சீட்டுக் கொடுக்கப்பட மாட்டாது. அவர்கள் ஓட்டுப் போடவும் முடியாது.
எனவே, கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க காலையிலேயே வந்து ஓட்டுப் போடுதல் நலம் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருவர் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டார்களா?
ஒருவருடைய ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது? அதற்கும் ஒரு வழி உள்ளது என்றுகூறுகிறார் சாரங்கி.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
ஒருவர் ஓட்டை இன்னொருவர் போட்டு விட்டால் அவருக்கு இன்னொரு வழியில் ஓட்டுப் போட வகை செய்துகொடுக்கப்படும். அந்த வழிக்கு "டெண்டர்டு ஓட்டு" என்று பெயர். இதன்படி, சம்பந்தப்பட்ட உண்மையான நபர்,தான்தான் உண்மையான நபர் என்று தகுந்த ஆதாரங்களைக் காட்டி வாக்குச் சாவடி தலைமை அதிகாரியிடம்அனுமதி வாங்கிவிட்டால் போதும். அவர் ஓட்டுப் போட்டு விடலாம்.
ஆனால், அதை மின்னணு எந்திரம் மூலம் போட முடியாது. பழைய முறையிலேயே வாக்குச் சீட்டில் முத்திரையிடவேண்டும். இதற்கான வாக்குச் சீட்டுக்களும் தயாராக உள்ளன. இத்தகைய டெண்டர் வாக்குச் சீட்டுக்களை அந்தவாக்குச் சாவடியின் அதிகாரியே பத்திரமாக வைத்திருப்பார் என்றார் சாரங்கி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications