ஜெயலலிதாவின் வாழ்வா! சாவா! பிரச்சாரம்
எல்லா மனுக்களும் தள்ளுபடியாயின. 4 தொகுதிகளிலுமே போட்டியிடுவதற்கான தகுதியை இழந்தஜெயலலிதாவுக்கு இது ஒரு வகையில் இழப்புதான் என்றாலும், இதன் மூலம் மக்கள் அனுதாபத்தைப்பெற்றுவிடலாம் என்ற பலத்த எதிர்பார்ப்புடன் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.
அனுதாப அலை வீசும் என்ற நம்பிக்கை அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் ஏற்பட்டுவிட்டது.
"அதிமுக வென்றால் நான் தான் அடுத்த முதல்வர்" என்று தனது நிலையை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்திவிட்டார்ஜெயலலிதா.
கூட்டணிக் கட்சிகள்:
சாதிக் கட்சி என திமுகவால் விமர்சிக்கப்பட்ட பா.ம.க. திமுகவை சாதிக் கூட்டணி என்றது. ஏராளமான சாதிக்கட்சிகளைக் கூட்டணியில் வைத்துக் கொண்ட திமுக, எங்களை சாதிக் கட்சி என்ற கூறுவது என்ன நியாயம் என்றுகேட்டார் ராமதாஸ்.
காங்கிரசுக்கு 14 சீட் கிடைத்த சந்தோஷம் இன்னும் தீரவில்லை. "ஊழல் ஊழல் என்று ஜெயலலிதாவைப் பார்த்துக்கத்துகிறார்களே. தெஹல்கா டாட் காம் ஊழலைவிட வேறு ஒரு ஊழல் நடந்திருக்க முடியுமா?" என்று கேட்கின்றனர்காங்கிரஸ் கட்சியினர்.
"இப்போதைக்கு எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம். ஆனால் காமராஜர் ஆட்சி அமைப்பதே எங்கள் லட்சியம்" என்றுகாமராஜரை இன்னும் மறக்காமல், அதிமுகவிற்காகச் சுறுசுறுப்புடன் பிரச்சாரம் செய்தது தமாகா.
தன் மகன் ஸ்டாலினை முதல்வராக்குவதற்காகத்தான் சதி செய்து கருணாநிதி தேர்தலில் தான் போட்டியிடமுடியாதபடி செய்துவிட்டார் என்ற கோஷமும் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிடைத்துவிட்டது.
"கருணாநிதியின் குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும்"; "எம்ஜிஆர் ஆட்சியை அமைக்க வேண்டும்"; "மக்கள்தான்என் எஜமானர்கள், மக்களை நம்பித்தான் இருக்கிறேன், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, மக்கள்தான் எனக்கு நீதிவழங்க வேண்டும்" போன்ற கோஷங்களும் அவருக்குப் பிரச்சாரம் செய்ய பெரிதும் கைகொடுத்து உதவின. தான்மேற்கொண்ட அனைத்துத் தொகுதிகளிலுமே புலம்பாத குறையாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார் ஜெயலலிதா.
இவருடைய பிரச்சாரத்திற்குத் திரையுலக நட்சத்திரங்களும் பெரிதும் உதவி வந்தனர்.
வெள்ளித் திரையில் மின்னிக் கொண்டிருந்த நடிகைகளான அம்பிகா-ராதா சகோதரிகள் அதிமுக பிரச்சாரக்கூட்டத்தில் முக்கிய அங்கம் வகித்தனர். செல்லும் இடங்களிலெல்லாம் இந்தத் திரையுலக நட்சத்திரங்களைப்பார்க்கப் பெரும் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருந்தது.
நடிகர்களில் எஸ்.எஸ். சந்திரனும் ராதாரவியும் திமுக கூட்டணிக் கட்சிகளை வாரு வாரு என்று வாரிவிட்டு,ஜெயலலிதாவைத் தலையில் தூக்கி வைக்காத குறையாகப் பிரச்சாரம் செய்தனர்.
திமுகவிலிருந்து பிரிந்தவர்களில் முக்கியமானவர்களான தீப்பொறி ஆறுமுகமும், அமைச்சராக இருந்ததமிழ்க்குடிமகனும் அதிமுகவில் இணைந்தது ஒரு பெரும் திருப்புமுனை.
தீப்பொறி ஆறுமுகத்தைத் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை தரக்குறைவாகப் பேசியிருக்க முடியாது. அவர்தற்போது அதிமுகவில் இருப்பது வேடிக்கைதான் என்றாலும், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இது ஒருஉதாரணமாகி விட்டது.
தீப்பொறி ஆறுமுகத்தின் பழைய பேச்சுக்கள் திமுக பிரச்சாரக் கூட்டங்களிலும், புதிய பேச்சுக்கள் அதிமுக பிரச்சாரக்கூட்டங்களிலும் ஆடியோ கேசட்டுகள் மூலமாக சக்கைபோடு போடுகின்றன.
தமிழகத்தில் அதிமுக, பாமக, தமாகா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு ஆகிய 5 கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன.ஆனால் பாண்டிச்சேரியில் அதிமுக-பாமக ஒரு அணியிலும், தமாகா-காங்கிரஸ்-கம்யூனிஸ்டு மற்றொருஅணியிலும் இருப்பது ஆச்சர்யமே!
இதைவிட, என்னதான் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவான போதிலும், அவர்தான்வருங்கால முதல்வர் என்ற நம்பிக்கை அவருக்கு மட்டுமல்ல அவருடைய கூட்டணிக் கட்சிகளுக்கும் இருப்பதுதான்ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications