வாக்குச்சாவடி கோரி மறியல் செய்த 3 வேட்பாளர்கள்
தக்கலை:
வாக்குச்சாவடி அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 3 வேட்பாளர்கள் உள்பட 212 பேர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
நுள்ளிவிளை பேரூராட்சிக்கு உள்பட்ட மாடத்தட்டுவிளையில் 1,500 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் 4 கிலோமீட்டர் நடந்து சென்று பேயன்குழியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்றுதான் வாக்களிக்க வேண்டும்.
எனவே மாடத்தட்டுவிளையில் வாக்குச்சாவடி அமைக்க வலியுறுத்தி, பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக,மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் உள்பட ஏராளமானமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், உயர் அதிகாரிகள் விரைந்து வந்து சமரசம் செய்துவைக்க முயற்சித்தனர்.
மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கவே, மறியலில் ஈடுபட்ட 212 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர்அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால், நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 4மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications