சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்ட கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhiஇது தான் எனக்கு கடைசித் தேர்தல்... என்று தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தகருணாநிதி தனது 60 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை ஒவ்வொரு அசைவிலும்காட்டி வருகிறார்.

இதுவரை தமிழகத்தில் எந்த அரசுமே தனது சாதனைகளைப் பட்டியலிட்டு ஓட்டுகேட்டதில்லை. முதல்முதலாக தமிழக அரசியல் வரலாற்றில் அதைச் செய்துகாட்டியிருக்கிறது திமுக. அதேபோல ஆட்சியில் இருக்கும் அரசுக்கு எதிராக சுத்தமாகஎந்தவிதமான அலையும் இல்லை என்று கூறும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு முதல் ஊழல்வரை அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக் காட்டியிருக்கிறது திமுக.

இருப்பினும் கிராமப் பகுதிகளில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பதால்பிரச்சாரத்தை மிகத் தீவிரமாகவே செய்தது திமுக.

தி.மு.கவின் முக்கிய பிரச்சாரமே ஊழல் ஆட்சியா? நேர்மையான ஆட்சியா?என்பதாகக் தான் இருந்தது.

தி.மு.கவுக்காக பிரச்சாரத்தில் முக்கியமாக ஈடுப்பட்டவர்கள், முதல்வர் கருணாநிதி.கல்விஅமைச்சர் அன்பழகன், முதல்வரின் மகனும் சென்னை நகர மேயருமானமு.க.ஸ்டாலின், நடிகர் சரத்குமார், தி.மு.கவின் பிரச்சார பீரங்கி நடிகை ராதிகா,நடிகரும் தற்போதைய வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான நடிகர்நெப்போலியன், எம்.எல்.ஏவும் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் ஆகியோர்.

இது தவிர பிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர்பிரச்சாரமும் தி.மு.கவுக்கு பலம் சேர்த்துள்ளது.

அ.தி.மு.கவின் மீது தி.மு.க. சுமத்திய முக்கிய குற்றச்சாட்டு ஊழல் ஆட்சி, சசிகலாகுடும்ப ஆதிக்கம், அராஜகம் ஆகியவை.

திமுக தனது சாதனைகளாக பல விஷயங்களை பட்டியலிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்துவருவது பொற்கால ஆட்சி எனக் கூறும் திமுக இந்த பொற்கால ஆட்சி தொடரவாக்களியுங்கள் என வாக்காளர்களுக்கு கோரிக்கை விடுத்தது.

தொழில் வளர்ச்சி, பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்விக்கு தி.மு.கவுக்கு வாக்களியுங்கள்எனக் கோரியுள்ளது.

தரமணியில் ஹை டெக் டைடல் பார்க் அமைத்துள்ளோம், நூற்றுக்கணக்கான பாலங்கள்கட்டினோம், உழவர் சந்தைகள் அமைத்தோம் எனக் கூறி ஓட்டு கேட்டார் கருணாநிதி.

ஸ்டாலினும் ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்தாலும், சென்னை மேயராக தான்செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு தி.மு.கவுக்கு ஆதரவு திரட்டினார்.

செல்லும் இடமெல்லாம் தி.மு.கவின் பேச்சாளர்கள் கூறிய முக்கிய கருத்துஜெயலலிதாவின் ஊழல்தான். அதையே முக்கியமாக ஹைலைட் செய்து பிரச்சாரம்செய்து வந்தார்கள்.

ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையில் அவர் முதல்வராகமுடியாது எனவும் தி.மு.க.பிரச்சாரம் செய்தது.

தி.மு.க வெற்றி பெற்றால் கருணாநிதிதான் முதல்வர். அ.தி.மு.க வெற்றி பெற்றால் யார்முதல்வர்? என கேள்வி எழுப்பினார்கள் தி.மு.கவினர்.

தேர்தலில் போட்டியிடவே முடியாதவர், எப்படி முதல்வராக முடியும்.அவர் கட்சிவெற்றி பெற்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட அவருக்கு ஆளுனர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மாட்டார் என தி.மு.க, பிரச்சாரத்தில் கூறப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+