யாருக்கு ஓட்டுப் போடலாம்?
சென்னை:
சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்து விட்டது. மைக் சத்தம் இல்லை, பிரச்சார பேரணிகள்இல்லை, ஆட்டோக்களின் உறுமல் இல்லை. அமைதி, அமைதி, எங்கும் அமைதி. நாளை வாக்களிக்கப்போகிறீர்கள்.
தமிழக தேர்தல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு படு குழப்பமாக உள்ளது. எந்த அணி நல்லது,எந்த அணி கெட்டது, எந்த அணி பரவாயில்லை என்று கூற முடியாத நிலை.
எந்த அணியில் எந்தக் கட்சி உள்ளது என்பதிலும் கூட தெளிவு இல்லை. கடைசி நேரத்தில் பல கட்சிகள்கழற்றி விடப்பட்டதால், கழன்று கொண்டதால், கடைசி நிமிடம் வரை வாக்காளர்களுக்கு அணிகள்குறித்த முழுமையான பிம்பம் கிடைக்கவில்லை.
ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணி 16 கட்சிகளுடன் களம் கண்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியிலும் 10கட்சிகள் வரை இருக்கின்றன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனித்துப்போட்டியிடுகிறது.
இதோ முக்கியக் கட்சிகள் குறித்த எங்கள் பிராக்ரஸ் ரிப்போர்ட்:
தி.மு.க. என்ன சாதித்தது?
1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அபரிமிதமான வாக்குகளையும், தொகுதிகளையும் கைப்பற்றிஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றியது தி.மு.க. கூட்டணி. அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் உடன் இருந்தது.சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் ஆதரவு இருந்தது. ஜெயலலிதா ஊழல் மக்கள் மத்தியில் புற்றுநோய்போல பரவி இருந்ததால், வெறுத்துப் போய் தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தனர் மக்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க.அரசு செய்த சாதனைகள் என்ன?.
கிராமப்புற மக்களுக்குப் பயன் அளிக்கும் விதத்தில் மினி பஸ்களை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம்இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், பெரிய பஸ்கள் சென்று வர முடியாத பகுதிகளுக்கு பஸ் வசதியும்கிடைத்துள்ளன. ஆனால் சென்னையில் மட்டும் இந்த வசதி அறிகப்படுத்தப்படாததன் நோக்கம்தெரியவில்லை.
நமக்கு நாமே திட்டம். தி.மு,க. அரசின் புதியதிட்டம் இது. இந்தத் திட்டத்தின்படி ஊரகப் பகுதிகளில்உள்ள கிராம மக்கள் தங்கள் பகுதியின் அடிப்படை வசதிகளை தாங்களே செய்து கொள்ள வேண்டும்.
நிதியை அவர்களே திரட்டிக் கொள்ள வேண்டும், அவர்களது பணிகளுக்குத் தேவையான நிலத்தை அரசுவழங்கி உதவி செய்யும். இந்தத் திட்டத்தின் கீழ் பல கிராமங்களில் ஏரிகள் தூர் வாரப்பட்டுள்ளன.குளங்கள் வெட்டப்பட்டுள்ளன. பாலங்கள் போடப்பட்டுள்ளன.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்: இதுவும் தி.மு.க. அரசின் சமூக நலத் திட்டமாகும். ஆனால் இதுஎந்தளவு வெற்றி பெற்றது என்று தெரியவில்லை. பிற திட்டங்கள் போல இது அவ்வளவாகபரிமளிக்கவில்லை.
சாலைகள் மற்றும் பாலங்கள்: தமிழகத்தின் கிராமப்புறங்களில் சிமென்ட் ரோடுகளும், கான்க்ரீட்ரோடுகளும் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பரவலாக போடப்பட்டுள்ளன. மின் வசதி வராத பலகிராமங்களுக்கு அது செய்யப்பட்டுள்ளது. மாட்டு வண்டிகள் மட்டுமே போய் வந்த பல கிராமங்களில்இப்போது மினி பஸ்கள் உருமிக் கொண்டுள்ளன.
மாநிலத்தின் பல நகரங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலைக்குறைப்பதற்காக கட்டப்பட்டுள்ள இந்த பாலங்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஆனால் சென்னையில் மட்டும் சிறப்பாக கட்டப்பட்டுள்ள இந்த பாலங்கள், பிற நகரங்களில்கடனுக்காக கட்டப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இருப்பினும்போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்தப் பாலங்கள் உதவியுள்ளன என்ற கருத்து பரவலாக உள்ளது.
உழவர் சந்தை, சமத்துவபுரம், டைடல் பார்க் என நீளுகிறது தி.மு.க. அரசின் சாதனைப் பட்டியல்.
எதிர்க்கட்சியாக என்ன செய்தது அ.தி.மு.க?
பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. ஆயினும் அவர்கள் பாதி வருடங்கள்தி.மு.க. கூட்டணியில் இருந்து விட்டதால், அ.தி.மு.கதான் அதிகாரப்பூர்வமில்லாத எதிர்க்கட்சியாகசெயல்பட்டு வந்தது.
தாமரைக்கனி பல முறை சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் பிரச்சினைகளை கிளப்பினார். பல முறைபதில் கிடைத்தது. சில முறை வெளியேற்றப்பட்டார். இதே போல, பி.ஆர்.சுந்தரம் எம்.எல்.ஏ.வும்மக்கள் பிரச்சினைக்காக பல முறை சபையைக் கலக்கியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications