எம்.ஜி.ஆர்.ஆட்சி அமைய வாய்ப்பு கொடுங்கள்: மூப்பனார்
சென்னை:
எம்.ஜி.ஆர்.ஆட்சி அமைய வாய்ப்பு கொடுங்கள் என்று சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனார் கூறினார்.
தமாகா சார்பில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சென்னை பூங்காநகரில் நடந்தது. அதில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகும். நல்லாட்சி அமையவேண்டுமானால் யாரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும்.
தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். அதனால் நல்லமாற்றம் அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
அந்த மாற்றம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் சகோதரி ஜெயலலிதாவின் தலைமையில் அமைய வேண்டும்.அந்த மாற்றம் வருவதற்கு அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
ஒரு பக்கம் மதவாத கூட்டணியும், மறுபக்கம் மதச்சார்பற்ற கூட்டணியும் போட்டியிடுகின்றன. யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது உங்களுக்கே தெரியும்.
தமிழகம் முழுவதும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ரேஷன் கார்டுகள்வழங்கப்படவில்லை. இதையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டுமெனில் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதுஉங்களுக்கே தெரியும் என்றார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications