தமிழக சட்டசபைத் தேர்தல்: நாளை வாக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைக்கு நாளை வாக்குப் பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்குத்தொடங்கும் இந்த வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும்.

முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக் வாக்குப் பதிவு எந்திரங்களைக் கொண்டு தேர்தல்நடக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன.தற்போது ஆட்சி செய்துவரும் தி.மு.க. அரசின் ஆட்சி காலம் இந்த மாதம் 21ம் தேதி முடிவடைகிறது. அதற்குள்தேர்தல் நடத்தி முடிக்கபட்டு மறு அரசு அமைக்கப்பட வேண்டும்.

தேர்தல் தேதி குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையம் ஏப்ரல் மாதம் 16ம் தேதிவெளியிட்டது.

தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை: 4,74,79.006

இவற்றில் ஆண் வாக்காளர்கள்: 2,38, 54,942 பேர்.

பெண் வாக்காளர்கள்: 2,36,24,064 பேர்

தமிழக சட்டசபையில் உள்ள 234 தொகுதிகளுக்கு 1,860 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 1,750பேர்.

பெண் வேட்பாளர்கள்: 110 பேர்.

வாக்குச் சாவடிகள்:

தமிழகம் முழுவதும் 54, 916 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் மாதம் 16ம் தேதி தொடங்கியது.

வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 23ம் தேதி முடிந்தது.

வேட்புமனுக்கள் ஏப்ரல் 24ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டன.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 26ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

வாக்குப் பதிவு:

நாளை (10ம் தேதி) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மே மாதம் 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+