ஒரு தவறு செய்தால்.. அதை தெரிந்து செய்தால்..
சென்னை:
ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என எம்.ஜி.ஆர்பாடியது ஜெயலலிதாவை குறிப்பிட்டுதான் என நடிகர் சரத்குமார் கூறினார்.
தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை வில்லிவாக்கத்தில் தி.மு.க.சார்பில் போட்டியிடும் நடிகர்நெப்போலியனை ஆதரித்தும், தி.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அன்பழகனை ஆதரித்தும் பிரச்சாரம்செய்தார் நடிகர் சரத்குமார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் பேசுகையில், 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் கருணாநிதியை வெற்றி பெறச்செய்தீர்கள். ஜெயலலிதா ஆட்சியல் பூகம்பத்தால் குஜராத் சீரழிந்ததது போல் சீரழிந்திருந்த தமிழகத்தை சீராக்கிபொற்கால ஆட்சியை வழங்கினார் கருணாநிதி.
பொற்கால ஆட்சி தொடர்ந்து வருகிறது. இப்போது க்ளைமாக்ஸ் காட்சி நடந்து கொண்டிருக்கிறது.
மூப்பனார், ஜெயலலிதா திருந்திவிட்டார் என கூறியுள்ளார். தவறு செய்தவர்கள்தான் திருந்துவார்கள். மூப்பனாரே,ஜெயலலிதா தவறு செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கருணாநிதி அலைதான் வீசுகிறது. வேறு எந்தஅலையும் வீசவில்லை.
எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்போம் என கூறி வரும் ஜெயலலிதா தான் ஆட்சி செய்த 5 ஆண்டு காலத்தில் எம்.ஜி.ஆர்.பெயர் எங்குமே இடம் பெறவில்லை.
ஜெயலலிதா, திரைப்பட நகரத்திற்கு ஜெயலலிதா திரைப்பட நகரம் என பெயரிட்டிருந்தார். கருணாநிதி வந்தபிறகுதான் அதன் பெயரை எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம் என மாற்றி அமைத்தார்.
எம்.ஜி.ஆர். ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் எனபாடியது ஜெயலலிதாவை குறிப்பிட்டுத்தான். பொற்கால ஆட்சி தொடர நீங்கள் அனைவரும் தி.மு.கவுக்குவாக்களியுங்கள் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications