பாதுகாப்புப் பணியில் 1,00,000 போலீசார்
சென்னை:
நாளை நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் 1,00,000 போலீசார்பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்று தமிழக காவல்துறை டிஜிபி ஆர். ராஜகோபாலன் கூறினார்.
இதுகுறித்து இன்று அவர் மேலும் கூறியதாவது:
மத்திய ரிசர்வ் போலீஸ் தவிர, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கானபோலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் முடிந்த பின், வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கும் 101 மையங்களுக்கும் சேர்த்து 121 பந்தோபஸ்துப்படைகள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
தேர்தல் கமிஷனின் விதிமுறைகளுக்கேற்ப, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 54,912 வாக்குச் சாவடிகளில், 6,730 வாக்குச் சாவடிகள் பதற்றம்மிகுந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவன் கூட்டாளிகள் நடமாடும் பகுதிகளாகக் கருதப்படும் சேலம், தருமபுரிமாவட்டங்களில் உள்ள பல வாக்குச் சாவடிகள் பதற்றம் மிகுந்தவையாகக் கூறப்படுகின்றன.
கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் சாதிக் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புகள்அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
கள்ள ஓட்டுக்கள் போடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜகோபாலன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications