For Daily Alerts
தேர்தல் முடிவுகள் .. பி.பி.சி. சிறப்பு ஏற்பாடு
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளை ஒலிபரப்ப லண்டனின் பி.பி.சி தமிழோசைப் பிரிவு சிறப்புஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் பி.பி.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மற்றும் அவை குறித்த கண்ணோட்டங்கள் 14-ம் தேதி முதல் 16-ம் தேதிதனது பிரத்யேக ஒலிபரப்பில் பி.பி.சி. தமிழோசை அளிக்கவுள்ளது.
தினசரி காலை 6.30 மணி முதல் 6.45 மணி வரை இந்த 15 நிமிட சிறப்பு ஒலிபரப்பை கேட்கலாம். 25, 31, 41மீட்டர் சிற்றலை வரிசைகளில் இந்த சிறப்பு ஒலிபரப்பை கேட்க முடியும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!