"உள்நாட்டு சாஃப்ட்வேர் தேவைகளை நிறைவு செய்தாலே போதும்"
டெல்லி:
இந்திய சாஃப்ட்வேர் துறையில் உள்ள தேக்க நிலையைச் சரிசெய்ய உள்நாட்டுத் தேவைகளை நிறைவு செய்தாலேபோதுமானது.
அமெரிக்கப் பொருளாதாரத் தேக்கநிலையின் எதிரொலியாக, இந்திய சாஃப்ட்வேர் பொருட்களை அமெரிக்காவில்ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
அது மட்டுமில்லாமல், அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியசாஃப்ட்வேர் நிபுணர்கள் தங்கள் தாய் நாட்டிற்கே திரும்பவும் விரட்டப்பட்டனர்.
இருந்தாலும், சாஃப்ட்வேர் தொழில் வளர்ச்சி கணிசமான அளவு உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.நாஸ்காம்-மாக்கென்ஸி நிறுவனம் கணித்துள்ள சராசரி 35 சதவிகிதத்திற்கும் அதிகமாக, 40 முதல் 45 சதவிகிதம்வரை இந்த வளர்ச்சி இருந்தது.
இந்த நிலையில் ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட பல நாடுகளும் ஜப்பானும் இந்தியசாஃப்ட்வேர் நிபுணர்களுக்காக தங்களுடைய கதவுகளைத் திறந்துவிட முன் வந்துள்ளன.
சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை தற்காலிகமானதுதான். கூடிய விரைவில் ஏறுமுகத்தை நோக்கிசாஃப்ட்வேர் ஏற்றுமதி இருக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களையும் கம்ப்யூட்டர்மயமாக்கவேண்டும்.
இந்திய சாஃப்ட்வேர் துறையில் உள்ள தேக்கநிலையைச் சமாளிப்பதற்கு இத்தகைய உள்நாட்டுத் தேவைகளைநிறைவு செய்து முடித்தாலே போதும் என்று கூறினார் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரமோத் மகாஜன்.
வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் போராடினால் போதும். எத்தகைய போட்டிகளையும்,தேக்கநிலையையும் நாம் சமாளிக்கலாம் என்று கூறினார் இந்தியாவின் "நம்பர் ஒன் சாஃப்ட்வேர் கம்பெனியானஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications