இலங்கை அரசுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை: புலிகள்
கொழும்பு:
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய பல ஒப்பந்தங்கள்கையெழுத்தாகியுள்ளது என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கதிர்காமர் கூறியுள்ளதற்கு விடுதலைப்புலிகள் மறுப்புத்தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விடுதலைப்புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பல பத்திரிக்கைகளில் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. பலவிஷயங்களில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்துள்ளார். இது தவறான தகவல். இந்தச்செய்தியைப் படித்து நாங்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தோம்.
கதிர்காமர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது இதுதான்: இலங்கையில் தனிஈழம் கேட்டு போராடி வரும்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து 18 ஆண்டுகளாகச் சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையில் அப்பாவிப்பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலை தொடரக் கூடாது என்பதற்காகவும், இப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவும் புலிகளுடன்பல விஷயங்களில் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். இதுபோன்ற ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை. இதுதவறான தகவல்.
நார்வே தூதர்களின் உதவியுடன் விடுதலைப்புலிகள் பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சித்து வருகிறோம். அவர்களுடன்தான் பேச்சுவார்த்தைநடந்து வருகிறது. நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதுவே இன்னும் முடியவில்லை.அப்போது எப்படி இலங்கை அரசுடன் அமைதிப்பேச்சுவார்த்தை குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தாக முடியும்? என்றார் ஆண்டன்பாலசிங்கம்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications