தமிழகத்தில் 58 சதவீத வாக்குகள் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தல் ஒரு வழியாக முடிந்து விட்டது. ஆனால் மொத்த வாக்குகளில் 58 சதவீதம் மட்டுமேபதிவாகியுள்ளது. இது போதுமா?

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கு வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது. பிற மாநிலங்களை விடதமிழகத்தில் வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக (சில இடங்களைத் தவிர) நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தேர்தல் களம் எப்போதுமே சூடாக இருந்தாலும் வன்முறைக்கு இல்லாமல் போர் முடியும் களம் என்றபெருமையை மீண்டும் பாதுகாத்துள்ளனர் நமது வாக்காளர்கள்.

ஆனால் வாக்குப்பதிவு விகிதம்தான் நம்மை கவலைக்குள்ளாக்குகிறது. அஸ்ஸாமில் 70 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளன. மேற்கு வங்காளத்தில் 71 சதவீதம், கேரளாவில் 73 சதவீதம், பாண்டிச்சேரியில் 75 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் தமிழகத்தில் 58 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது ஏன்?

அஸ்ஸாமை விட படித்தவர்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு. தீவிரவாதிகள் அச்சுறுத்தல், எந்த நேரம்வன்முறை வெடிக்கலாம், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஆகியவை இருந்தும் கூட 70 சதவீதஅஸ்ஸாமியர்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது பெருமைப்படக் கூடிய விஷயம்.

ஆனால் இப்படி எந்தச் சூழலுமே இல்லாத தமிழ்நாட்டில் மட்டும் ஏன் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்தது?

வாக்களிக்க வாருங்கள், வாருங்கள் என தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே வானொலி, தொலைக்காட்சிகளில்அரசும், தனியார்களும் அழைப்பு விடுத்தும் கூட 42 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க மறுத்து விட்டனர் அல்லதுமறந்து விட்டனர்.

பல பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல்போனதால் பலர் வாக்களிக்க முடியவில்லை. அப்படிப்பட்டவர்களைக் கழித்து விட்டுப் பார்த்தாலும் கூட 40சதவீதம் பேராவது வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.

ஜனநாயகத்தில் நமக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ஆயுதம் ஓட்டுதான். அதைப் பயன்படுத்தாமல் இருப்பதுநமக்கு அளிக்கப்பட்ட உரிமையை நாமே அலட்சியப்படுத்தியதற்கு சமமாகும்.

கற்றவர்கள் நிறைந்த, தொழில் வளர்ச்சியில் முன்னேறியுள்ள மாநிலம் என பல பெருமைகள் நிறைந்தும்வாக்களிக்கும் விழிப்புணர்வை நாம் இன்னும் முழுமையாக பெறாமல் இருப்பது வருத்தப்படக் கூடியவிஷயம்தான்.

எதிர்காலத்தில் இந்த நிலை மாறும் என்று நம்புவோமாக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+