திருச்சி மாணவி விழுப்புரத்தில் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி விழுப்புரம் அருகே ஓடும் ரயிலில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா (21). இவர் சென்னை அண்ணா பல்ககலைக்கத்தில் முதல்ஆண்டு எம்.எஸ்.சி படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கியிருந்தார்.
கடந்த 8-ம் தேதி திருச்சிக்கு ரயிலில் சென்றுள்ளார். ரயில் விழுப்புரத்திற்கு அருகே அய்யூர் அகரம் என்ற பகுதியில்வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரயிலில் இருந்து கீழே குதித்தார். இதில் ரயிலில் சிக்கி நசுங்கி அங்கேயேஇறந்தார்.
இறந்த சுகன்யா வைத்திருந்த பையில் வைத்திருந்த ஒரு கடிதத்தில், தன்னால் சரியாக படிக்க முடியவில்லைஎன்பதால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தார்.
இதுகுறித்து விழுப்புரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications