ஜெயலலிதா முதல்வராக கூடாது: சோ கருத்து
டெல்லி:
தேர்தலில் அ.தி.மு.க. வென்றால் ஜெயலலிதா முதல்வராக கூடாது. வேறு ஒருவரை முதல்வராக அவர் நியமிக்க வேண்டும் எனபிரபல பத்திரிக்கையாளரும், ராஜ்யசபா எம்.பியுமான சோ ராமசாமி கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளது. வியாழக்கிழமை சட்டசபை தேர்தல் முடிந்தது. ஞாயிற்றுக்கிழமைவாக்குகள் எண்ணப்படுகின்றன. அனைத்து முடிவுகளும் மதியம் 2 மணி போல் வெளிவந்துவிடும்.
தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட கருத்து கணிப்புகளும், தேர்தலுக்கு பிறகு வெளியிடப்பட்ட கருத்து கணிப்பகளும் அ.தி.மு.க கூட்டணிக்குவெற்றி வாயப்பு இருப்பதையே காட்டுகின்றன.
ஜெயலலிதா தேர்தலுக்கு முன்பிருந்தே அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றால் தான்தான் முதல்வராக வருவேன் என கூறி வந்தார்.ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள்நிராகரிக்கப்பட்டன.
ஆனாலும் அ.தி.மு.க அணி வெற்றி பெற்றால் நான்தான் முதல்வராக வருவேன் ஜெயலிலலிதா தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவை ஆதரித்து வரும் பிரபல பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகரும், ராஜ்யசபா எம்.பியுமானசோ ராமசாமி அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றால் ஜெயலலிதா முத்லவராக கூடாது. வேறு யாரையாவது முதல்வராக்கவேண்டும் என கூறியுள்ளார்.
இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால்ஜெயலலிதா முத்லவராவதை சட்டபூர்வமாக தடுத்து நிறுத்த முடியாது. ஆனாலும் ஜெயலலிதா தான் முதல்வராவதை தவிர்த்து விட்டுவேறு ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும்.
நான் எனது பத்திரிக்கையான துக்ளக்கிலும், அ.தி.மு.க தனித்து பெரும்பான்மை பெற்றாலும் அல்லது அ.தி.மு.க. கூட்டணிபெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க கூடாது என கூறியிருந்தேன்.
சட்டபூர்வமாக ஜெயலலிதா முத்லவராவதை தடுக்க முடியாது. ஆளுநர் ஒருவருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கவேண்டுமென்றால் அவருக்கு மெஜாரிட்டி எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.அவ்வாறு ஆதரவு இருக்குமானால் அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கலாம்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் முதல்வராக பதவி வகிக்கலாமா என கேள்வி எழுப்புகிறார்கள். தண்டனைபெற்றவர்கள் பதவி வகிக்க்க கூடாது என்று எந்த சடடமும் கூறவில்லை.
தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டவர்கள் முதல்வராக முடியுமா என கேள்வி எழுப்புகிறார்கள். ஜெயலலிதாவின்வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்படலாம். அல்லது அவர் தேர்தலில்போட்டியிடும் விதமாக அவரது தண்டனை குறைக்கப்படாலும்.
இவை எல்லாவற்றிற்கும் வாய்ப்பிருக்கும் போது ஆளுநர் எவ்வாறு ஜெயலலிதாவின் மேல் முறையீடு நிராகரிக்கப்படும் என முடிவுசெய்ய முடியும்?
அ.தி.மு.கவும் சரி. தி.மு.கவும் சரி தனித்து ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணி ஆட்சிதான் அமையும். வெளியிலிருந்து ஆதரவு பெற்று ஆட்சிஅமைக்கப்படும் பட்சத்தில் அரசு நீண்டகாலம் நிலைத்திருக்காது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications