மறுவாக்குப்பதிவிலும் மக்களிடம் ஆர்வமில்லை
சென்னை:
சென்னை துறைமுகம் தொகுதியில் உள்ள ஏழுகிணறு வாக்குச்சாவடி உள்பட தமிழகத்தில் 6 வாக்குச்சாவடிகளில் மிகவும் மந்தமானவாக்குப்பதிவு நடந்து வருகிறது.
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளில் வியாழக்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது 6 வாக்குச்சாவடிகளில்மின்னணு வாக்குப்பதிவு ஏற்படுத்திய கோளாறு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு ஆகிய காரணங்களால் வாக்குப்பதிவின் போதுபிரச்சனைகள் ஏற்பட்டது.
இதையடுத்து பிரச்சனை ஏற்பட்ட 6 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையஉத்தரவுப்படி, 6 வாக்குச்சாவடிகளில் மிகவும் மந்தமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
சென்னை துறைமுகம், அருப்புக்கோட்டை, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடி மற்றும் திருவெறும்பூர் தொகுதிகளில் உள்ளவாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
ஆறு வாக்குச்சாவடிகளிலுமே வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக உள்ளது. பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வந்துஓட்டுப்போடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை.
ஏற்கனவே கள்ள வோட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு ஆகிய காரணங்களால் தேர்தல் அதிகாரிகள்மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியிருந்தனர். இதையடுத்து இந்த 6வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications