"தேர்தல் கமிஷனின் சதியால் பல லட்சம் பேர் வாக்களிக்க முடியவில்லை"
ஈரோடு:
தமிழத்தில் பல லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோனதற்கு தேர்தல் கமிஷனின்திட்டமிட்ட சதியே காரணம் என மாநில கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே. பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
கடந்த 1999ஆம் ஆண்டில் வாக்களித்த பலருக்கும், இப்போது வாக்களிக்க வாய்ப்பு இயலாமல்போய்விட்டது. அடையாள அட்டையைக் கொடுத்து வாக்குரிமையை தேர்தல் கமிஷன் பறித்துக்கொண்டது.
இது ஜனநாயகக் கேலிக்கூத்தாக உள்ளது. பெயர் சேர்க்கக் கோரி 42 தொகுதிகளில் அளவுக்குஅதிகமான விண்ணப்பங்களை தேர்தல் கமிஷன் சேர்த்துக் கொண்டது. மீண்டும் சரிபார்க்கும் பணியில் முகவரிமாறிச் சென்றவர்களின் பெயர்களை எடுத்து விட்டது சரியே. ஆனால் அதே முகவரியில் இருப்பவர்களைச்சேர்க்கத் தவறி விட்டது.
விடுபட்டவர்களின் பெயர்களைச் சரிபார்க்க அவகாசம் அளிப்பதாகக் கூறியது. ஆனால்,இறுதிப்பட்டியலைப் பார்வைக்கு வைக்க காலதாமதம் ஆனது. இறுதிப்பட்டியல் வைக்கப்படுவதற்குள்கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து போனது. இதனால் பொதுமக்கள் யாரும் சரிபார்க்கஇயலவில்லை.
இத்தகைய தவறுகளைச் சுட்டிக் காட்டியும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டியும், நான் கடந்த 6 மாதங்களாக தேர்தல் கமிஷனுக்கு முறையாக எழுத்து மூலம் புகார்அனுப்பியும் எனக்குப் பதில் இல்லை.
பல லட்சம் வாக்காளர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் கமிஷனின் திட்டமிட்டசதியாகும். கடந்த 1999ஆம் ஆண்டு வாக்களித்தவர்களின் பெயர்கள் இந்த முறை வாக்களிக்கமுடியாதவகையில் நீக்கப்பட்டுள்ளது. இது குற்றவியல் நடவடிக்கையாகும்.
வாக்குரிமையைப் பறிக்க தேர்தல் ஆணையம் ஒவ்வொருவருக்கும் ரூ. 4 செலவிட்டுள்ளது. தபால்மூலம் சரிபார்க்க ரூ.3.50ம், நேரடியாக சரிபார்க்க 50 பைசாவும் செலவிட்டுள்ளது. ஜனநாயகவாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு தேர்தல் கமிஷன் சரியான பதில் சொல்ல வேண்டும் என்றார்பெரியசாமி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications