மீண்டும் தி.மு.க. கூட்டணியில் சேருமா பா.ம.க.?
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் வியாழக்கிழமை நடத்து முடிந்து விட்டது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலைகாணப்படுவதால், தேர்தலுக்கு பின் ஏற்படக்கூடிய கூட்டணி மாற்றங்களுக்கான செயல்பாடுகள் தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது.
தே.ஜ.கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்த பா.ம.கவை மீண்டும் தி.மு.க.கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் தி.மு.க.ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பா.ம.க. வட தமிழ்நாட்டில் பலம் பெற்ற கட்சி. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.கவுக்கு 27தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
பா.ம.க 15 முதல் 18 இடங்களில் வெற்றி பெறும் என தி.மு.க. நினைக்கிறது. தி.மு.க. கூட்டணிக்கு பெரும்பான்மைகிடைக்காகவிட்டால் பா.ம.க. ஆதரவு அளித்தால் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியும். அதற்கு பா.ம.கவை சம்மதிக்க வைக்கும்முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ராமாதாசின் கனவு பாண்டிச்சேரி ஆட்சி. பாண்டிச்சேரியில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் அவருக்கு பாண்டிச்சேரி ஆட்சியை விட்டுக்கொடுத்து தமிழகத்தில் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தி.மு.க.செயல்பட்டு வருகிறது.
பாண்டிச்சேரி ஆட்சி, மத்திய அமைச்சரவையில் 2 அமைச்சர் பதவி ஆகியவை பா.ம.கவுக்கு கொடுக்கப்பட்டால் ராமதாஸ்தி.மு.கவுக்கு ஆதரவு கொடுத்து தே.ஜ.கூட்டணியில் மீண்டும் இணைவார் என்ற கணக்கில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மேலோட்டமாக பேசப்பட்டதாகவும் இதற்கு ராமதாஸ் பிடிகொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.இதுபற்றி கேள்விப்பட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் ராமதாஸ் கருத்தை அறிவதற்காக தினகரனை திண்டிவனத்திற்குஅனுப்பியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications