3 மாநிலங்களில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது
டெல்லி:
அசாம், மேற்குவங்கம் மற்றும் தமிழகத்தில் உள்ள 171 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை காலை மறுவாக்குப்பதிவுதொடங்கியது.
கடந்த 10 ம் தேதி நடந்த சட்டசபைத் தேர்தலின்போது நடந்த வன்முறைச் சம்பவங்கள், மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் பல காரணங்களால் இந்த 302 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்குதேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இவற்றில் 171 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.
தமிழகத்தில் 6 வாக்குசாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்காத காரணத்தாலும்,ஆங்காங்கே நடந்த சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டினாலும் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம்உத்தரவிட்டிருந்தது.
மேற்கு வங்கத்தில் 90 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவற்றில் 33வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படாத காரணத்தால் மறுவாக்குப்பதிவுநடக்கிறது.
பிற வாக்குச்சாவடிகளில் கள்ள வோட்டுக்கள் போட அரசியல் கட்சித் தொண்டர்கள் முயற்சித்தது மற்றும் தேர்தல்வன்முறை காரணமாக மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அசாமில் 206 வாக்குச்சாவடிகளில் இரண்டு கட்டமாக மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இவற்றில்பிரம்மபுத்திரா பகுதியில் உள்ள 75 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது. 131 தொகுதிகளில்ஞாயிற்றுக்கிழமை காலை வாக்குப்பதிவு நடக்கிறது.
வாக்குச்சீட்டுக்கள் பறிப்பு, கள்ள வோட்டுக்கள் ஆகிய காரணங்களால் இந்த வாக்குச்சாவடிகளில்மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டிருந்தது தேர்தல் ஆணையம்.
ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் நான்கு மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் 12, 000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை நகர போலீஸ்கமிஷனர் காளிமுத்து கூறுகையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
