• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காணாமல் போன ஜாதிக்கட்சிகள்

By Staff
|

கோவை:

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

சாதி, இனத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வின. சாதி உணர்வுகளுக்கு இடம்கொடுக்காத மகத்தான தீர்ப்பாக அமைந்தது தேர்தல்.

ஒரு இனத்தின் அடிப்படையில், சாதியின் அடிப்படையில் ஒரு சில நாட்களில்முளைத்த சாதிக் கட்சிகளுக்கு இந்ததேர்தல் பாடம் கற்பித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாதி அமைப்புகள் ஆளுக்கு ஒரு கட்சியைஆரம்பித்து, கூட்டணி பேசத் தொடங்கின.

இந்த வகையில் திமுக அனைவரையும் "அரவணைத்துச் செல்கிறோம் எனக் கூறி இடம் கொடுத்தது. அதேசமயம்,அரசியல் கட்சிகளை கழற்றி விட்டது. இதன் பாதிப்பும் திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் கோவை, நீலகிரி, சேலம் தர்மபுரி உள்பட 7 மாவட்டங்களில் அமைப்புரீதியாக செயல்பட்ட கொங்கு வேளாளர் கவுண்டர்பேரவை, கொங்கு நாடு மக்கள் கட்சி என்ற கட்சியைஆரம்பித்தது. இந்தக் கட்சிக்கு கவுண்டர்களிடையே செல்வாக்கு இருப்பதாகக் கருதி, திமுகவுடன் பேரம் பேசி ஒருஇடத்தைப் பெற்றது.

இந்தக் கட்சிக்கு பாலக்கோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அங்கு தனக்கு செல்வாக்கு இல்லை எனக் கூறி,அதிகமாக தங்கள் இன மக்கள் வாழும் பெருந்துறை வேண்டும் எனக் கோரியது. இதை திமுக ஏற்றுக் கொண்டது.

இங்கு கோவிந்தசாமி என்பவர் போட்டியிட்டார். ஆனால், விளைவு 31, 855 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். மிகவும் அதிக வித்தியாசத்தில் தோற்றுப்போன இவருக்கு, "இனத்தின் ஆதரவு இல்லை என்று தானேஅர்த்தம்?.

இதே போன்று முதலியார்கள் கட்சியாக கருதப்பட்ட புதிய நீதிக்கட்சியும் திமுக கூட்டணியில் 5 இடங்களைப்பெற்று போட்டியிட்டது. தேர்தல் முடிவு "ஜீரோ. எங்களுக்கு நெசவாளர்களின் ஆதரவு உண்டு.

அவர்களின் பிரச்னையை நாங்கள் தீர்த்து வைப்போம். பல ஆயிரக்கணக்கான ஓட்டுகள் எங்களுக்கு உண்டு.நெசவாளர்களின் நேசன் சுத்தானந்தன் எனக் கூறி புதிய நீதிக் கட்சி தேர்தல் களத்தில் குதித்தது. ஆனால், அவரும்தோற்றுப் போனார். எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் என்று பார்த்தால் 32, 946 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான்.

அரசியல் கட்சிகளும் அரசியல் கட்சிகளும் மோதிக் கொண்ட இடங்கங்களில் கூட இத்தகைய வித்தியாசம்இருந்ததில்லை.

யாதவ இனத்தின் விடிவெள்ளி:

இதேபோன்று தான் யாதவ இனத்தின் விடிவெள்ளி (?) என அழைக்கப்பட்ட கண்ணப்பனின் கரத்தைப் பற்றி 6இடங்களை அளித்தது. இந்த மக்கள் தமிழ்தேசம், ஒரு இடத்தில் கூட தங்களது இனத்தின் பலத்தைநிரூபிக்கவில்லை. கிருஷ்ணசாமிக்குத் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு உண்டு எனக் கூறி, பத்து இடங்களைப்பகிர்ந்தளித்தது.

ஆனால், பாவம், கிருஷ்ணசாமி கூட இம்முறை வெற்றி பெற முடியவில்லை. விடுதலைச் சிறுத்தைகளைப்பிடித்தால், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன மக்களின் ஆதரவை பெற்று விடலாம் என எண்ணிய திமுகவிற்குஏமாற்றமே மிஞ்சியது. திருமாவளவன் மட்டும் நூலிழையில் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார். இந்தவிடுதலைச் சிறுத்தையோ போட்டியிட்ட இடங்கள் 8.

அதோடு, தமிழ் பாட்டாளி மக்கள் கட்சி, முத்தரையர் சங்கம், தமிழர் பூமி, அகில இந்திய வேந்தர் முன்னேற்றக்கழகம் என எல்லோரையும் இணைத்த "சமத்துவக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பே இல்லாமல் போனது. அரசியல்கட்சிகளை மட்டுமே மக்கள் ஆதரித்துள்ளனர்.

இதே திமுக அணியில் இடம் பெற்ற எம்.ஜி.ஆர் அதிமுக 3 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களைக்கைப்பற்றியுள்ளது. திமுக ஆதரவு நண்பர்கள் 2 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.பாரதிய ஜனதாக் கட்சி 21 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களைப் பெற்றுள்ளது.

சாதிக் கட்சிகளுக்கு கருணாநிதி காட்டிய தாராளம், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கவில்லை. அதோடு மதிமுககழன்று போனதால் தோல்வியிலும் சில இடங்களை இழந்து விட்டது. மதிமுக ஒன்றும் இந்த தேர்தலில்பெரும்பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

திமுக விற்கு எதிரணியிலும் அரசியல் கட்சிகளே வெற்றியை தக்க வைத்துக் கொண்டன. பல ஆண்டுகளாகதமிழகத்தில் காலூன்றிய அரசியல் கட்சிகளின் பலம் தான் அதிமுகவின் வெற்றிக்கு காரணமாக விளங்கியுள்ளதுஎன்பதில் ஐயமில்லை.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X