கவர்னரை சந்திக்கிறார் ஜெயா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 196 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றதையடுத்துஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை காலை கவர்னரை சந்திக்கிறார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 196 இடங்களைப் பெற்றது. இவற்றில் அதிமுகவுக்குமட்டும் 132 இடங்கள் கிடைத்தது. புவனகிரி தொகுதியில் அதிமுக ஆதரவு வேட்பாளர் அருள் வெற்றி பெற்றார்.
தனி மெஜாரிட்டி அமைக்க அதிமுகவுக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் தனி மெஜாரிட்டியைவிட கூடுதலாக 15இடங்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தமிழக கவர்னர் பாத்திமா பீவியை, திங்கள்கிழமை ஜெயலலிதா சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications