புதுவையில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அதிமுக உறுப்பினர்கள் 3 பேரின் ஆதரவைப்பெற்று ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ்-தமாகா, அதிமுக-பாமக, திமுக-பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களைப் பெற்றுள்ளது. ஆனால் தனிப்பெரும்பான்மை பெறாத காரணத்தால் காங்கிரசால்ஆட்சியமைக்க முடியாது.
புதுவையில் தேர்தல் முடிவுகள்: இறுதி நிலவரம்
மொத்த தொகுதிகள்: 30
காங்கிரஸ் கூட்டணி - 13
காங்கிரஸ் - 11
தமாகா - 2
திமுக கூட்டணி - 12
திமுக -7
புதுவை மக்கள் காங்கிரஸ் - 4
பாஜக -1
அதிமுக கூட்டணி -3
அதிமுக - 3
சுயேச்சை -2












Click it and Unblock the Notifications