திமுக தோல்வி: கிராமமே மொட்டை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததையடுத்து ஒரு கிராம மக்களே மொட்டைபோட்டு கையில்உதயசூரியன் பச்சை குத்திக் கொண்டனர்.

திமுக ஆட்சியில் இவர்களுக்கு கிடைத்த அடிப்படை வசதிகளை மறவாமல் இருக்க இந்த முடிவைமேற்கொண்டனர்.

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்ததொகுதியில் அழகர்நாயக்கன்பட்டி என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்திற்கு ஐ.பெரியசாமி தனது பதவி காலத்தில் அடிப்படை வசதிகள் பலவற்றைச் செய்துகொடுத்துள்ளார்.

அதிமுக ஆட்சி காலத்தில் எந்த வசதியும் இல்லாத இந்த கிராமத்தில் குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.

இந்த ஊரைச் சேர்ந்த அனைவரும் ஓட்டுப் போட்டும் கூட பெரியசாமி தோல்வியடைந்தார். இதனால்அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் திங்கள் கிழமை ஒன்று கூடினர்.

பெரியசாமியின் சுவர் விளம்பரம் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்தனர். அங்கு உதயசூரியன் சின்னத்திற்கு முன்பாகஅவர்கள் கூடி மொட்டை போட்டனர்.

பின்னர் தங்களது வலது கையில், "சாகும்வரை உடலாலும் மனதாலும் உதயசூரியனை பிரிய மாட்டோம் எனபச்சை குத்திக் கொண்டனர். இந்த கிராமத்தில் உள்ள 200 ஆண்களும் மொட்டைபோட்டுக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+