ஜெயலலிதாவுக்கு லல்லு வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பிகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ்வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லல்லு பிரசாத் யாதவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக முதல்வராக ஜெயலலிதாமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அவரை முதல்வராகப் பதவியேற்க கவர்னர் அழைத்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா மக்களுக்கு நல்லது செய்வார் என்றும் நம்புகிறேன் என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications