24 பெண்களை எம்.எல்.ஏக்களாக்கிய கட்சிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 234 எம்.எல்.ஏக்களில் 24 பேர் பெண்கள்.
அதிமுக தான் அதிக பெண் எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள கட்சியாகத் திகழ்கிறது. இந்தக் கட்சிக்கு 19 பெண்எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் 15 பேர் புதியவர்கள். மற்றவர்கள் முன்பே எம்.எல்.ஏ. பதவிவகித்தவர்கள்.
இதற்கு அடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் 2 பெண்கள் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். இவர்களில் டி.யசோதாமட்டுமே பழைய எம்.எல்.ஏ. மகேஷ்வரி புதியவர்.
முதல் முறையாக இரண்டு இலக்க எண்களில் எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2பெண்கள் எம்.எல்.ஏக்களாக தேர்வு பெற்றுள்ளனர்.
முதல் முறையாக சட்டசபைக்குள் நுழையும் பெண் எம்.எல்.ஏக்கள் 3 பேர். பா.மக.வின் காசாம்பு பூமாலை,சிவகாமி வின்சென்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பால பாரதியே அவர்கள்.












Click it and Unblock the Notifications