அவசரமாக கூடுகிறது பாமக செயற்குழு கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாமகவின் சட்டசபைத் தலைவர் மற்றும் கொறடாவை தேர்ந்தெடுக்கும் வகையில் பாமக செயற்குழுக் கூட்டம்அவசரமாக 16 ம் தேதி புதன்கிழமை கூடுகிறது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது பாமக. 27 தொகுதிகளில்பாமக போட்டியிட்டு 20 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இந்நிலையில் பாமக சட்டசபைத் தலைவர் மற்றும் கொறடா ஆகியோரைத் தேர்வு செய்வதற்காக பாமக செயற்குழுக்கூட்டம் அவசரமாக 16 ம் தேதி கூடுகிறது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 ம் தேதி காலை 10 மணிக்கு தைலாபுரம்தோட்டம் மாங்கனி அரங்கில் மாநில செயற்குழுக் கூட்டம் ராமதாஸ் முன்னிலையில் எனது தலைமையில்நடக்கவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications