புதுவையில் அதிமுக ஆதரவை நாடுகிறது காங்.
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 13 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கூட்டணி அதிமுகஆதரவுடன் ஆட்சியமைக்கும் என்று பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிஆட்சி அமையும். காங்கிரஸ் கட்சித் தலைவர் சண்முகம் அதிமுகவின் ஆதரவைப் பெறுவது குறித்துஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்துப்பேசுவார்கள் என்று தெரிகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சண்முகம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பாண்டிச்சேரியில்காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்வார் என்றும் தெரிகிறது.
பாண்டிச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டசபைத் தொகுதிகளில் காங்கிரஸ் 11 இடங்களையும், தமிழ் மாநிலகாங்கிரஸ் 2 இடங்களையும் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் அதிமுகவின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ்தலைமையில் ஆட்சி ஏற்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications