மக்கள் சரியான தீர்ப்பு வழங்கி விட்டனர்: செல்வகணபதி
சேலம்:
கருணாநிதியால் பழிவாங்கப்பட்ட நாங்கள் இப்போது பெருமூச்சு விடுகிறோம் என டி.எம் செல்வகணபதிஎம்.பி.,தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக எம்.பி.டி.எம் செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மக்கள் பணிக்கு முன்னுரிமை கொடுக்காமல், அதிமுகவை அழிக்கும் வேலையில் ஈடுபட்ட கருணாநிதிக்குமக்கள் தக்கப் பாடம் கற்பித்துள்ளனர்.
ஜெயலலிதாவை அச்சுறுத்திய கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு மக்கள் முற்றுப் புள்ளி வைத்துவிட்டனர்.
ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதை அறிந்த முதல்வர் கருணாநிதி, அவரைத் தேர்தலில் நிற்கவிடாமல்சதி செய்தார். அவர் மனப்பால் குடித்தார். மக்கள் சரியான தீர்ப்பை அளித்ததன் மூலம் அவரது பகல் கனவுதகர்ந்தது.
ஜெயலலிதாவை முதல்வராகத் தேர்வு செய்ததன் மூலம் மக்கள் தெளிவான தீர்ப்பு அளித்து விட்டனர். குழப்பம்ஏற்படுத்தி அதில் வெற்றி காண நினைத்த குருடர்களின் எண்ணம் தவிடுபொடியானது.
கருணாநிதியால் பழிவாங்கப்பட்ட எங்களைப் போன்றோர் இப்போது தான் பெருமூச்சு விடுகிறோம்.
கூட்டணியின் சாதி அரசியல் எடுபடாது, துரோக அரசியல் வெல்லாது என்பது மக்கள் அளித்த தெளிவான தீர்ப்பின்மூலம் உறுதியாக விட்டது. இவ்வாறு செல்வகணபதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications