திமுகவை கை கழுவிய 11 மாவட்டங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

1996-ம் ஆண்டு அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக இந்தத் தேர்தலில் 11 மாவட்டங்களில் ஒரு சீட்கூட பெற முடியாமல் தோல்வியைத் தழுவியுள்ளது.

திமுக அமைச்சரவையில் இருந்த 15 அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் தோல்வியடைந்து விட்டனர். முன்னாள்முதல்வர் கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி,முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆகியோர் தடுமாறித்தான் வெற்றி பெற்றுள்ளனர். தனது எம்.எல்.ஏ பதவியைராஜினாமா செய்வது குறித்து கருணாநிதி யோசித்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

தமிழகத்திலுள்ள 30 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் திமுகவுக்கு ஒரு இடத்தில் கூடவெற்றி கிடைக்கவில்லை.மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நீலகிரி, கரூர், கோவை, நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர்ஆகிய மாவட்டங்களில் திமுகவுக்கு சுத்தமாக ஒரு இடம் கிடைக்கவில்லை.

திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு இடத்தில் மட்டுமே திமுக ஜெயித்துள்ளது. தென்மாவட்டங்களில் திமுக பல தொகுதிகளில் தோற்றதற்குக் காரணம் மதிமுக. இந்தக் கட்சியின் வேட்பாளர்கள் பலர்,திமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர். மதிமுகவை தூக்கி எறிந்ததற்கான பலனை இப்போது திமுகஉணர்ந்திருக்கும் என மதிமுகவினர் பெருமையோடு கூறி வருகின்றனர்.

வட மாவட்டங்களில் திமுகவுக்கு ஓரளவு நல்ல இடங்கள் கிடைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அங்குபாட்டாளி மக்கள் கட்சி திமுகவின் நம்பிக்கையை அழித்து விட்டது.

சென்னை மட்டுமே திமுகவுக்கு சாதகமாக வாக்களித்துள்ளது. இங்குள்ள 14 தொகுதிகளில் 10 தொகுதிகளில்திமுக வென்றுள்ளது. மொத்தம் வென்றுள்ள 28 இடங்களில் 10 தொகுதிகள் சென்னை நகர தொகுதிகள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+