தேர்தலில் அ.தி.மு.க.பெண் வேட்பாளர்கள் சாதனை
சென்னை:
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட பெண்வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. அணி அமோகவெற்றி பெற்றது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜ் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப்பின் இரண்டாவதுமுறையாக முதல்வர் பதவிக்கு ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.
ஜெயலலிதா ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றிருந்ததால் அவர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. அவர்தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனாலும் அவர் தலைமையிலான அணி வெற்றிபெற்றுள்ளது.
அ.தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அனைத்து பெண் வேட்பாளர்களும்வெற்றி பெற்றுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 104 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 24 பேர் அ.தி.மு.க.தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த 24 பேரில் 19 பேர் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் பா.ம.கவைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர்காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.
தமிழக சட்டசபை வரலாற்றை நோக்கும் போது 1991ம் ஆண்டுதான் பெண் வேட்பாளர்கள் அதிகமான அளவில்வெற்றி பெற்றுள்ளனர்.
1952ம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் மாநில தேர்தலின் போது ஆந்திரா, கேரளா மாநிலங்களும் மதராஸ்மாநிலத்தில் இணைந்திருந்தன. அந்த தேர்தலில் 24 பெண் வேட்பாளர்கள் போட்டியாளர்கள் போட்டியிட்டனர்.அவர்களில் இரண்டு பெண் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.
1957ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 24 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 12 பேர் வெற்றிபெற்றனர். 1962ம் ஆண்டு தேர்தலின் போது போட்டியிட்ட 23 பெண் வேட்பாளர்களில் 13 பேர் வெற்றி பெற்றனர்.
1967ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை நடைபெற்ற 6 தேர்தல்களில் பெண் வேட்பாளர்களின் வெற்றி மிகவும்குறைவாகவே இருந்தது. அந்த கால கட்டத்தில் நடைபெற்ற 6 சட்டசபை தேர்தலில் 203 பெண் வேட்பாளர்கள்போட்டியிட்டனர். இவர்ளில் 34 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
1991ம் ஆண்டு ஜெயலலிதா முதன்முதலாக தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற போதும் அ.தி.மு.க. சார்பில்போட்டியிட்ட 10 பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 101 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில்அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 26 பெண் உறுப்பினர்களும், அ.தி.மு.க ஆதரவில் போட்டியிட்ட 5 பெண்வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
அதே போன்ற சாதனை இந்த முறையும் நடந்துள்ளது. இந்த முறை வென்ற பெண் வேட்பாளர்கள் பட்டியலில்முதுகலை பட்டதாரிகள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள், வழக்கறிஞர் ஆகியோரும் அடங்குவர்.
ஆனால் 1996ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் 1991ம் ஆண்டு தேர்தலுக்கு நேர்மாறான முடிவுகளை வழங்கியது.
அந்த தேர்தலில் 156 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 11 பெண் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றிபெற்றனர். இவர்களில் ஒருவர் கூட அ.தி.மு.கவைச் சேர்ந்தவர் இல்லை.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூட அந்த தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை தேர்தலில் தி.மு.க-அ.தி.மு.க.ஆகிய இருகட்சியின் தலைமையிலும் மொத்தம் 28 கட்சிகள்போட்டியிட்டன. இவற்றில் 17 கட்சிகள் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும், 11 கட்சிகள் அ.தி.மு.கதலைமையிலான கூட்டணியிலும் போட்டியிட்டன.
ஆனாலும் அ.தி.முக., தி.மு.க., ம.தி.மு.க., பா.ஜ.க, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், மக்கள் தமிழ் தேசம் ஆகிய 9 கட்சிகள் மட்டுமே பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தின.
இவற்றில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நின்ற பெண் வேட்பாளர்கள் மட்டுமே வேெற்றி பெற்றனர்.மற்றவர்கள் அனைவரும் தோல்வியை தழுவினர். இதில் சுயேச்சையாக போட்டியிட்டவர்களும் அடங்குவர்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications