இலங்கையில் கண்ணிவெடிவிபத்து: தமிழ்ச்செல்வன் சிக்கினார்?
கொழும்பு:
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கையின் வடக்குப்பகுதியில் கண்ணி வெடி வெடித்ததில்விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் சிக்கிக் கொண்டார்.
நார்வே தூதுக்குழு அமைதிப் பேச்சு வார்த்தை குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்பு இந்த வெடி விபத்துநடந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது
இது குறித்து கூறப்படுவதாவது:
விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழச்செல்வன் நார்வே வன்னி பகுதியில் இருக்கும் மாலாவிபகுதியில் கண்ணி வெடி விபத்தில் சிக்கிக் கொண்டார். அவரது நிலை என்ன என்பது தெரியவில்லை எனகூறப்படுகிறது.
ஆனாலும் சோல்ஹேம் இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து புதன் கிழமை மதியம் கிளம்பி விடுதலை புலிகளின்தலைவர்களை சந்திக்க மாலவிக்கு சென்றுள்ளார் என நார்வே தூதரக செய்தித் தொடர்பாளர் டோமாஸ்ஸ்டேன்ச்லாந்த் கூறியுள்ளார்.
விடுதலை புலிகளின் ஆதரவு இணைய தளமான தமிழ் நெட் தெரிவித்திருப்பதாவது:
செவ்வாய்க்கிழமை மதியம் கோகாவில் அருக நடந்த வெடிகுண்டு விபத்தில் விடுதலைப் புலி ஒருவர்கொல்லப்பட்டார். 2 பேர் காயமடைந்தனர். இவர்கள் தமிழச்செல்வனுக்கு பாதுகாப்பாக சென்று கொண்டிருந்தார்என தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் காயமடைந்தாரா என்பது பற்றி எதுவும்தெரிவிக்கப்படவில்லை.
செவ்வாய்க்கிழமை நார்வே தூதுக்குழு தலைவர் எரிக் சோல்ஹேம் இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவையும், அமைச்சர் லட்சுமண் கதிர்காமரையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார்.நார்வே தூதுக்குழுவினர் வியாழக்கிழமை மாலவி செல்வார்கள்.
இந்த வெடிவிபத்துக்கு இலங்கை ராணுவம்தான் காரணம் என இணையத்தளத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஆனாலும் இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சனாத் கருணாரத்னே கூறுகையில், ராணுவத்திற்கும், இந்தசம்பவத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றார்.
நார்வே தூதுக்குழுவினர் இந்த முறை நடத்தவுள்ள பேச்சு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசும், விடுதலை புலிகளும் தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் அமைதிப் பேச்சுவார்த்தை துவங்கும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications