ஜெ. மீதான வருமான வரி வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது நிலுவையில் இருக்கும் வருமானவரி வழக்கின் விசாரணை இந்த மாதம் 21ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா மீது வருமான வரித்துறையினரால் சென்னை 1வது குற்றவியல்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து விட்டது. இறுதி கட்ட விசாரணைக்காக சென்ற மாதம் 24ம் தேதிஜெயலலிதா ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஜெயலலிதா அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்தவழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு எழும்பூர் 1வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 1வதுகுற்றவியல் மாஜிஸ்திரேட்டு விடுமுறையில் இருந்ததால் வழக்கு விசாரணையை 2வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுபெருமாள் விசாரணை செய்தார்.
செவ்வாய்க்கிழமையும் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஜெயலலிதா சார்பில் ஆஜரான அவரதுவழக்கறிஞர் ஜோதி, இந்த வழக்கில் முன்னர் விசாரிக்கப்பட்ட 3 சாட்சிகளை மீண்டும் விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
ஆனால் இதற்கு வருமான வரித்துறை வழக்கறிஞர் ராமசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில்,ஜெயலலிதா இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு அப்படியே இருக்கிறது. அதற்கு முதலில்பதிலளிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து மாஜிஸ்திரேட்டு பெருமாள் இந்த வழக்கு விசாரணையை இந்த மாதம் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துஉத்தரவிட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications