தேர்தல் முடிவு குறித்து இ.கம்யூ. ஆலோசனை
சென்னை:
இடது கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் வெற்றி,தோல்விக்கான காரணங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருக்கும் கட்சியின்தலைமையகத்தில் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மாநில செயலாளர் சங்கரய்யாமுன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
செயற்குழு கூட்டம் முடிந்தபின் நிருபர்களுக்கு பேட்டியளித்த சங்கரய்யா கூறியதாவது:
செயற்குழு கூட்டத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிஆற்றிய பணிகள், வெற்றி தோல்விக்கானகாரணங்கள், கட்சி எதிர்காலத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்த பணித்திட்டங்கள் பற்றிஆலோசனை செய்யப்பட்டது.
தமிழக இடது கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் கூட்டம் விரைவில் நடக்கவிருக்கிறது. இந்த கூட்டம் சென்னையில்நடைபெறும். இதில் தமிழக சட்டசபை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தமிழக தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஜெயலலிதா முதல்வரானதற்கு நாங்கள் நேரில் சென்றுவாழ்த்து தெரிவித்தோம்.
இன்னும் 6 மாதங்களுக்குள் ஜெயலலிதா எம்.எல்.ஏ. ஆகவேண்டும். அதற்கான முயற்சிகளை ஜெயலலிதாமேற்கொள்வார். ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற கருத்தை மக்கள் தேர்தல் முடிவு மூலம்தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி கூறிய எதையும் மக்கள் ஏற்கவில்லை. கருணாநிதி தலைமையில் தி.மு.க நல்ல எதிர்க்கட்சியாகசெயல்பட வேண்டும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications