மே மாத இறுதியில் புலிகள்-இலங்கை அரசு பேச்சுவார்த்தை?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் மே மாதஇறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை பத்திரிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைக்கும் வகையில் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக்சோல்ஹெம் அதிபர் சந்திரிகா, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், இலங்கையில் உள்ள தமிழர் மற்றும்முஸ்லீம் இன மக்களின் கட்சித் தலைவர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

புலிகள் ஆதரவு இணையதளம் ஒன்றில், நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் வியாழக்கிழமைபுலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசுவார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் அமைதி ஏற்படும் வகையிலும், இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் இந்தப்பேச்சுவார்த்தையை தொடங்கி வைக்க எரிக் சோல்ஹெம் முயன்று வருகிறார் என்று கூறப்படுகிறது.

கொழும்பில் வெளியாகும் பத்திரிக்கை செய்தி ஒன்றில், எரிக் சோல்ஹெம் செவ்வாய்க்கிழமை இரவு அதிபர்சந்திரிகாவை சந்தித்துப் பேசினார். அவர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரையும்சந்தித்துப் பேசினார்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமுன் நார்வே தூதுக்குழுத் தலைவர் இலங்கையில் உள்ள முஸ்லீம் காங்கிரஸ்கட்சித் தலைவர் ராப் ஹக்கீம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் சம்பந்தன் ஆகியோரையும்சந்தித்துப் பேசினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 மாதங்களில் சோல்ஹெம் இரண்டாவது முறையாக வன்னி காட்டுக்குச் செல்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் இவர் வன்னி காட்டுக்குச் சென்று புலிகள் தலைவர் பிரபாகரனைச்சந்தித்துப் பேசினார். அப்போது பிரபாகரன் இவரிடம் இலங்கையில் விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தையைத்தொடங்க புலிகள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இருப்பினும் தற்போதைய நிலவரப்படி, விடுதலைப்புலிகளையும், இலங்கை அரசையும் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைப்பது எரிக் சோல்ஹெம்முக்கு மிகவும் கடினமான காரியமாகும்.

ஏனெனில் புலிகள் மீதான தடையை நீக்குவது மற்றும் சண்டை நிறுத்தத்தை அறிவிப்பது ஆகியவற்றை இலங்கைஅரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதற்கிடையே, நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் வியாழக்கிழமை காலை புலிகள் இருப்பிடமானவன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.

முன்னதாக விடுதலைப்புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை கடந்த மாதம் லண்டனில் சந்தித்துப்பேசினார் எரிக்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க நார்வேதூதுக்குழுத் தலைவரின் தலையீடு தேவை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+