அசாம் முதல்வராகிறார் தருண் கோகாய்
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
நடந்து முடிந்த அசாம் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அருதிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் அசாம்காங்கிரஸ் தலைவர் தருண் கோகாய் அசாம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
அசாமில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அசாம் கன பரிஷத் படுதோல்வி அடைந்தது. அசாம் காங்கிரஸ்அருதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் பிரபல்ல குமார் மெஹந்தா தனதுபதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அசாம் காங்கிரஸ் தலைவர் தருண் கோகாய் அசாம் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
தலைநகர் கவுஹாத்தியில் புதன்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் தருண் கோகாய்முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications