பாண்டி.: முதல்வரைத் தேர்ந்தெடுக்க காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சென்னை:
பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வியாழக்கிழமை கூடி தங்களது சட்டசபைக் கட்சித் தலைவரைதேர்ந்தெடுக்கின்றனர்.
பாண்டிச்சேரியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன்கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எந்தக் கட்சிக்கும்பெரும்பான்மை பலம் கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமையவே அங்கு வாய்ப்பு அதிகம்.
அதிமுக 3 இடங்களில் அங்கு ஜெயித்துள்ளது. அதன் ஆதரவை கோரி காங்கிரஸ் கட்சி மேலிடம் தனதுபிரதிநிதியாக பிரணாப் முகர்ஜியை சென்னைக்கு அனுப்பி வைத்தது.
புதன்கிழமை சென்னை வந்த முகர்ஜி, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவைச்சந்தித்து ஆதரவு கோரினார். ஜெயலலிதாவும் நிபந்தனையற்ற ஆதரவைத் தருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சிஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்வியாழக்கிழமை கூடுகின்றனர்.
இக்கூட்டத்தில் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். அதன் பிறகு இந்த முடிவுஆளுநருக்குத் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் ஆளுநரின் அழைப்பின் பேரில் புதிய முதல்வர்பதவியேற்பார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications