காங். எம்.எல்.ஏக்கள் டெல்லி சென்றனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அக்கட்சியின் தலைவர் இளங்கோவன் தலைமையில் டெல்லிக்குப்புறப்பட்டுச் சென்றனர். கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அவர்கள் ஆசி பெறுகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
7 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமையில் டெல்லிக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச்சென்றனர். அதற்கு முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.
டெல்லி சென்ற எம்.எல்.ஏக்கள் குழுவை தொண்டர்கள் ஏராளமான அளவில் திரண்டு வந்து விமான நிலையத்தில்வழியனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications