புதிய தலைமை தேர்தல் கமிஷனராக லிங்டோ நியமனம்
டெல்லி:
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஜே.எம்.லிங்டோவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கானஅதிகாரபூர்வமான அறிவிப்பை வியாழக்கிழமை மத்திய அரசு வெளியிட்டது.
தற்போது இந்திய தேர்தல் ஆணையராக இருந்துவரும் எம்.எஸ்.கில்லின் பதவிக்காலம் ஜுன் மாதம் 13ம் தேதிமுடிவடைகிறது. இவருக்கு அடுத்து யார் தேர்தல் ஆணையராக யார் வருவார் என பல்வேறு விதமான ஊகங்கள்நிலவி வந்தன.
தேர்தல் ஆணையத்தில் கில்லுக்கு அடுத்தபடியாக மூத்த உறுப்பினராக உள்ள லிங்டோதான் தேர்தல் ஆணையராகநியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டாலும், தே.ஜ.கூட்டணியின் சார்பில் சில பெயர்களும், வேறு பல அதிகாரிகளின்பெயர்களும் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்பட்டதால் யார் அடுத்த தேர்தல்ஆணையர் ஆவார் என்ற சஸ்பென்ஸ் நிலவி வந்தது. இதற்கு வியாழக்கிழமை முடிவு தெரிந்தது.
மத்திய அரசு லிங்டோ தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். ஆனால் 65 வயதாகிவிட்டால் அவர்கள் ஓய்வு பெற வேண்டும்.இதன்படி 62 வயதாகும் லிங்டோ 3 ஆண்டுகாலம் இந்த பதவியில் இருப்பார்.
லிங்டோ பதவி உயர்வு பெற்றுள்ளதால் காலியாகியுள்ள பதவிக்கு மத்திய அரசில் ஊழியர் நலத்துறைசெயலாளராக உள்ள பிஹாரி தாண்டன் நியமிக்கப்படுவார் என மத்திய அரசு அதிகாரபூர்வாக அறிவித்துள்ளது.
லிங்டோ மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர். வடகிழக்கு மாநிலத்திலிருந்து தேர்தல் ஆணையராகபொறுப்பேற்கும் முதல் நபர் லிங்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி உயர்வு பெற்றது குறித்து லிங்டோ கூறுகையில், நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களுக்கும் வாக்காளஅடையாள அட்டை வழங்குவதுதான் எனது முதல் பணி.
வரும் தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமே தேர்தல் நடைபெறும் என்பதும்உறுதிப்படுத்தப்படும்.
தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்க பல சீர்திருத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துறைசெய்வேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications