தோல்விக்காக பயப்பட மாட்டேன் .. ஆலடி அருணா
சென்னை:
தோல்வி கண்டு பயப்படாதவன் நான். எனது பொது வாழ்க்கை தொடரும் என்று சட்டசபைத் தேர்தலில் தோற்றமுன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கூறியுள்ளார்.
திமுக அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர் ஆலடி அருணா. இவரது முழுப் பெயர் ஆலடிப்பட்டிஅருணாச்சலம். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளராகபோட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
தனது தோல்வி குறித்து ஆலடி அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தோல்வி எங்களுக்குப்பேரதிர்ச்சியை அளிக்கிறது. இந்தளவு மோசமான தோல்வியை சந்திப்போம் என தேசிய ஜனநாயக முன்னணிக்கட்சித் தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதிமுக அணியினருக்கே கூட இது நம்ப முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள்,பொதுமக்கள் என யாருமே எதிர்பாராத அளவு எங்கள் தோல்வியும், அவர்களது வெற்றியும் அமைந்து விட்டது.
ஆலங்குளம் தொகுதியில் நான் தோல்வியுற்றுள்ளேன். ஆனாலும் ஊழல் சக்தியை விரட்ட வேண்டும், கலைஞரின்பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்காக வாக்களித்த 54,387 வாக்காளர்களுக்கும் எனதுநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வார்த்தைக்கு மதிப்பளித்து என் பொது வாழ்வு தொய்வின்றி தொடரும். என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற லட்சியத்துடன் தொடர்ந்து செயல்படுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications