தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் அமைச்சர்களை!
சென்னை:
தமிழக அமைச்சரவையில் முதலவர் ஜெயலலிதாவையும் சேர்த்து மொத்தம் 25 அமைச்சர்கள் உள்ளனர். புதியஅமைச்சர்கள் குறித்த சில தகவல்களை இங்கே காணுங்கள்..
சி.பொன்னையன்
மூத்த அ.தி.மு.க. பிரமுகர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் முக்கியதுறைகளை வகித்தவர்.
தற்போதைய ஜெயலலிதா அமைச்சரவையில் நிதி மற்றும் சட்டத்துறையை பெற்றுள்ளார். நிதானமாக செயல்படக்கூடியவர் என்ற பெயர் பெற்றவர். திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைகிறார்.
அ.தி.மு.கவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள பொன்னையன், நீண்ட காலமாக அரசியலில் அதிகம் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.
அய்யாறு வாண்டையார்
மூத்த காங்கிரஸ் அரசியல்வாதி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிஅ.தி.மு.க.வில் சேர்ந்தார்.
சசிகலா குடும்பத்தினரின் சிபாரிசின் பேரில்தான் அய்யாறு வாண்டையாறுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததாகபேச்சு உண்டு. எவ்வாறு இருப்பினும் மூத்த அரசியல்வாதியான வாண்டையார் அமைச்சர் பதவிக்குப்பொருத்தமானவர்தான்.
தம்பித்துரை
முன்னாள் மத்திய அமைச்சர். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1991ல் நடந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்ற பர்கூர் தொகுதியில் தற்போது போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் தம்பித்துரை.
பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் தம்பித்துரைக்கு கல்வித் துறை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் லோக் சபா துணை சபாநாயகராக இருந்தவர். சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்.
ஜெயக்குமார்
சுறுசுறுப்பான அமைச்சர் என்று பெயர் பெற்றவர். கடந்த ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சர்பதவியை வகித்தவர். வடசென்னையில் உள்ள ஒரு மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
எளிமையானவர். யாருடனும் எளிதாகப் பழகுபவர். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு யார் என்று பாராமல்உதவுபவர். நல்ல மனிதர் என்று தொகுதியில் மட்டுமின்றி கட்சி பாகுபாடின்றி அனைத்துத் தரப்பிலும் பெயர்பெற்றவர்.
ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகியுள்ளார். உப்பிலியாபுரம் சரோஜா
எம்.ஜி.ஆர். காலத்து பிரமுகர். நீண்ட காலமாக அரசியலில் காணப்படாத இவர் தற்போது அமைச்சராகியுள்ளார்.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சரோஜாவுக்கு முதல் பட்டியலிலேயே அமைச்சர் பதவி கிடைத்திருப்பதுஅவருக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுத்திருப்பதையே காட்டுகிறது.
உப்பிலியாபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிகவும் எளிமையானவர், அமைதியான குணம்படைத்தவர்.
தளவாய் சுந்தரம்
கன்னியாகுமரிக்குக் கிடைத்த இரண்டாவது அமைச்சர். வழக்கறிஞர். பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட சென்னையில்தான் பெரும்பாலும் இவரது பணிகள்.1989-ல் தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருந்தார். 1991-ல் சென்னைமாவட்ட வக்கீல் பிரிவு செயலாளராக இருந்தார்.
1996-ல் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணைச் செயலாளராக இருந்தார். பின்னர் ராஜ்யசபை எம்.பி.யாகத்தேர்ந்தெடுக்கப்பட்டர். தற்போது எம்.எல்.ஏ.வாகியுள்ளதால், தனது எம்.பி.யை ராஜினாமா செய்யவுள்ளார்.
அன்வர் ராஜா
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்துள்ளார். அ.தி.மு.கவில் சேருவதற்கு முன்புதி.மு.க.வில் தீவிரமாக செயல்பட்டவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று சிறைவாசம்அனுபவித்துள்ளார்.
தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேறி அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது அன்வர் ராஜாவும் அதில்சேர்ந்தார். கடந்த 35 ஆண்டுளாக முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
1986ம் ஆண்டு முதல் 1991 வரை மண்டபம் பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்தார். 1989ம் ஆண்டுராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. ஜானகி அணியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
அ.தி.மு.கவின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக அ.தி.மு.க. மாநில அமைப்புச்செயலாளராக இருக்கிறார். 1987-ம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருந்துவருகிறார்.
முன்பு மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்யசபா எம்.பி) இருந்தார். 52 வயதாகும் அன்வர் ராஜாவுக்குமனைவியும், நான்கு மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications