பாமாயில் இறக்குமதியை எதிர்க்கிறது விவசாயிகள் சங்கம்
கோவை:
மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யும் திட்டத்தைக் கை விட வேண்டும்என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.ஆர். சிவசாமி கோரிக்கைவிடுத்துள்ளார்.
கோவையில் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.ஆர். சிவசாமி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:
சமீபத்தில் பிரதமர் வாஜ்பாய் மலேசியா சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப்பயணத்தின்போது அவர் கையெழுத்திட்டுள்ள ஒரு ஒப்பந்தத்தில், பாமாயில்இறக்குமதிக்கும் அனுமதித்து கைழுெத்திட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே பாமாயில் இறக்குமதியால், தேங்காய் எண்ணையின் விலை கடும் வீழ்ச்சிஅடைந்து விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றனர்.
இதிலிருந்தே இன்னும் விவசாயிகள் மீளவில்லை. இந்த நிலையில் இப்போது மீண்டும்பாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்திருப்பது மோசமான விளைவுகளைஏற்படுத்தும்.
பாகிஸ்தானிடமிருந்து சர்க்கரை இறக்குமதி செய்ததால், நமது நாட்டில் கரும்புவிவசாயம் கடுமையாகப் பாதிப்படைந்தது. இந்நிலை இனிமேலும் தொடரக்கூடாது.
மேலும், சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில், விவசாயப் பொருட்களை இறக்குமதிசெய்ய அனுமதிக்க கூடாது.
விவசாய விரோதக் கொள்கையினால், நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள்தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு எதிராக அமைந்ததை மத்திய அரசு உணர்ந்திருக்கும்என நம்புகிறோம் என்று கூறியிருந்தார் சிவசாமி.












Click it and Unblock the Notifications