தமிழகத்தில் தொடரும் மின் வெட்டு
சென்னை:
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையும் மின் தடை தொடர்ந்தது.
தமிழக மின் வாரியத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமான நெய்வேலி அனல் மின்நிலையத்தில் ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கடந்த நான்குநாட்களாக தமிழகத்தில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதன் காரணமாக மின்விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின் தடை தொடர்ந்தது.
சென்னையில் சனிக்கிழமை இரவு 2 முறை மின்தடை ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை ஒருமுறை மின்தடைஇருந்தது.
புறநகர்ப் பகுதிகளில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டது. இதே நிலைதான் தமிழகம் முழுவதும் நீடித்தது.
நெய்வேலி மின் நிலைய ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு மத்திய அரசு பல்வேறுமுயற்சிகளைக் கையாண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications