சென்னையில் இன்று பலத்த மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடும் வெப்பத்துக்கு ஈடு கொடுக்கும் விதமாக, சென்னையில் ஞாயிற்றுக்கிழமைபிற்பகல் பலத்த மழை பெய்தது.
கடந்த மே மாதம் 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியதிலிருந்தே, சென்னையில்கடுமையான வெப்பம் நிலவி வந்தது. வழக்கம்போலவே, இந்த வருடமும் சென்னைவெப்பத்தைக் கண்டு மக்கள் வெளியே வரப் பயந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும்தொடர்ந்து 15 நிமிடங்கள் மழை பெய்தது. பிற்பகல் 2.10 மணிக்கு ஆரம்பித்த மழை2.25 மணி வரை பெய்தது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்றுவானிலை அறிக்கை தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications