நாளை கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
ஜெயலலிதா தலைமையிலான தமிழக சட்டபையின் முதல் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.இதில் அனல் பறக்கும் விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை சட்டசபை கூடவிருக்கும் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை தமிழகசட்டசபையில் அனல் பறக்கும் விவாதத்திற்கு வழி வகுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பரவியுள்ள தீவிரவாதத்தையும் வகுப்பு வாத நடவடிக்கைகளையும்ஒடுக்குவேன். கருணாநிதி அரசு கஜானாவை காலியாக்கி விட்டது என கூறியுளார்.
ஜெயலலிதாவின் இந்த அறிக்கை தி.மு.க. அரசு தேச விரோத சக்திகளை ஒடுக்க தவறி விட்டதாக குற்றம் சாட்டும்விதமாக அமைந்துள்ளது. ஜெயலலிதாவின் இந்த அறிக்கை சட்டசபை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதத்திற்குவழி வகுக்கும் என கூறப்படுகிறது.
ஜெயலலிதா தலைமையிலான அரசின் அமைச்சரவைக்கு காளிமுத்து சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைசபாநாயகராக தலித் தலைவர் அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.கவின் சட்டசபை தலைவராக முன்னாள் கல்வி அமைச்சரும், தி.மு.கவின் பொதுச் செயலாளருமானஅன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக முன்னாள் மின்துறை மற்றும் சுகாதாரத்துறைஅமைச்சருமான ஆற்காடு வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் தலைவருமான கருணாநிதி கூறுகையில், கட்சி பணிகளுக்கு நான் முக்கியத்துவம்அளிக்கவிருக்கிறேன். தேவையான சமயங்களில் சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வேன் என்றார்.
கருணாநிதி இவ்வாறு கூறியிருப்பது கருணாநிதி தினந்தோறும் சட்டடபைக்கு சென்று ஜெயலலிதாவுடன் நேரடிமோதலில் ஈடுபட விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.
தமிழக ஆளுனர் பாத்திமா பீவி இந்த மாதம் 25ம் தேதி சட்டசபையில் உரை நிகழ்த்துகிறார். அவர் அ.தி.மு.க. ஆட்சிஅமைக்க அழைத்து ஜெயலலிதாவை முதல்வராக்கியதை எதிர்க்கும் விதமாக ஆளுநர் உரையை புறக்கணிக்கபோவதாக தி.மு.க கூறியுள்ளது.
தி.மு.கவின் இந்த முடிவை ஜெயலிதா குறை கூறியுள்ளார். தி.மு.க.ஜனநாயக கடைமையிலிருந்து தவறி விட்டது எனஅவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு இரண்டு பெரிய வேலை நிறுத்தங்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் கடந்த 14 நாட்களாக துறைமுக ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு நடத்தி வரும்போராட்டம் தமிழகத்திற்கு பெரும் வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தபடியாக நெய்வேலி நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் கடந்த 1 வாரமாக நடத்தி வரும் விதிப்படிவேலை என்ற வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்திற்கு வரும் மின்சாரத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தி தொடர்மின்வெட்டிற்கு வழி வகுத்திருப்பது. இந்த இரண்டு கடும் பிரச்சனைகளையும் புதிய அரசு எதிர் கொள்ளவேண்டியுள்ளது.
தமிழக நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிதித்துறை அமைச்சர் பொன்னையன் கூறுகையில், தி.மு.க.அரசு கஜானாவை காலியாக விட்டுச் சென்றிருக்கிறது.
ஆனாலும் தமிழக நிதிநிலை அறிக்கையில் புதிதாக எந்த விதமான வரிகளும் விதிக்கப்படாது. ஏனென்றால்ஏற்கனவே தமிழக மக்கள் அதிகபட்சமான வரி விதிப்பால் துன்பப்பட்டு வருகிறார்கள்.
அரசு கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும். ஏனெனில் தமிழகத்தில் 40மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறத்தில்தான் வசிக்கிறார்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications