காஷ்மீரில் 3 மாதங்களுக்கு சண்டை நிறுத்தம் நீட்டிப்பு?
டெல்லி:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வார இறுதியில் நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
காஷ்மீரில் உள்ள தீவிரவாத அமைப்புக்களின் தலைவர்களுக்கும், அரசு தூதருக்கும் இடையே நடந்துபேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த வார இறுதியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில்சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
முன்னதாக சனிக்கிழமை ஸ்ரீநகர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங் ஆகியோர் புறக்காவல் படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக் கூட்டத்தில் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, மாநில உள்துறை அமைச்சர் அகமது லோன், டி.ஜி.பி.சூரி, ராணுவ கமாண்டர் முகர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரம்ஜான் மாதம் தொடங்குவதையொட்டி காஷ்மீரில் நீட்டிக்கப்பட்ட சண்டை நிறுத்தம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.இருப்பினும் வன்முறைச் சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதற்கிடையே, இந்த மாத இறுதியுடன் சண்டை நிறுத்தம் முடிவடைய உள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications