வேதனையில் சாதனை: 327 அடி நீள காதல் கடிதம்
டெல்லி:
காதலி தன்னை உதறித் தள்ளிய வேதனையைத் தாங்க முடியாத ஒருவர், அவளுக்காக 327 அடி நீளமுள்ள காதல்கடிதம் ஒன்றை எழுதி சாதனை புரிந்தார்.
இந்தியாவின் மேற்கு வங்கத்தில்தான் இந்தச் சோதனையான சாதனை நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்கத்தின் அசான்சால் நகரத்தைச் சேர்ந்த அனுபம் கோஸல் என்ற அந்தக் காதலர், தன் காதலி தன்னைவெறுத்து ஒதுக்கிய உடன், முதலில் தற்கொலை செய்யத்தான் நினைத்தாராம்.
இருந்தாலும், இறந்த பின்னும் தன்னைப் பற்றி அனைவரும் நினைக்கும் வகையில் எதையாவது செய்து விடவேண்டும் என்று நினைத்தார்.
ஒரு பெரிய செய்தித் தாள் ரோலை வாங்கிக் கொண்டார். கடந்த 2000மாவது வருடம் ஜனவரி 12ஆம் தேதிதன்னுடைய மாரத்தான் கடிதத்தை எழுத ஆரம்பித்தார்.
6 மாதங்கள் விடாப்பிடியாக உட்கார்ந்து தன்னுடைய காதலியை நினைத்து, உருகி, அவளைப் பற்றி கவிதைகள்,கட்டுரைகள், பாடல்கள் என்று எழுதித் தள்ளி விட்டார். கூட்டிப் பார்த்தபோது சுமார் 80,000 வார்த்தைகள்அக்கடிதத்தில் இருந்தன. 312 அடி நீளத்திற்கு பேப்பர் நிரப்பப்பட்டும் விட்டது.
இது போதாது என்று நினைத்த கோஸல், மேலும் ஒரு 15 அடி நீளத்திற்குக் கடிதம் எழுதினார்.
கடிதம் எழுதி முடித்த வேளையில், தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையே கோஸல் கைவிட்டுவிட்டாராம்.
தன்னுடைய சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக, அந்நிறுவனத்தைத் தொடர்புகொண்டார். ஆனால் கின்னஸ் புத்தக அதிகாரிகள் அவருடைய சாதனையை ஏற்க மறுத்து விட்டனர்.
327 அடி நீளத்திற்கு பொறுமையாகக் கடிதம் எழுதியவர், சும்மா விடுவாரா? தன்னுடைய சாதனையை அங்கீகரிக்கவேண்டும் என்று கோரி, பொறுமையாக மீண்டும் மீண்டும் கின்னஸ் புத்தக நிறுவனத்திற்குக் கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார்.
இவர் எழுதிய இந்த நீளமான காதல் கடிதம் அவருடைய காதலியைச் சென்றடைந்து விட்டதா என்றுதான்தெரியவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications