ரயில் கொள்ளையர்களைக் கண்டதும் சுட உத்தரவு
சென்னை:
சென்னையிலிருந்து கிளம்பும் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த 2 கொள்ளைகளைத் தொடர்ந்து, ரயில்கொள்ளையர்களைக் கண்டதும் சுடுவதற்கு தமிழக ரயில்வே போலீஸ் ஐ.ஜி. ஜி.திலகவதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே 17ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்குச் சென்று கொண்டிருந்த ரயிலில் ஒருகொள்ளைக் கும்பல் புகுந்து, பயணிகளை மிரட்டி கொள்ளையடித்தது.
இந்நிலையில், சென்னையில் இருந்து கேரளாவில் உள்ள காயங்குளத்திற்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில் கடந்தசனிக்கிழமை மாலை 6.45 மணிக்குக் கிளம்பியது.
காட்பாடிக்கும் லத்தேரிக்கும் இடையே ரயில் சென்று கொண்டிருக்கும்போது, 12 பேர் கொண்ட ஒரு கொள்ளைக்கும்பல், ரயிலில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டிருந்த பெண்களை கத்தி, அரிவாள்களைக் காண்பித்து மிரட்டி,அவர்களின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் இருளில் மறைந்து ஓடிவிட்டனர்.
இந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதியிலிருந்தே தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கேரளமாநிலங்களில் அடிக்கடி ரயில் கொள்ளைகள் நடந்து வந்தன.
இதைத் தொடர்ந்து, ரயில் கொள்ளையர்களைக் கண்டதும் சுடுமாறு ரயில்வே போலீஸ் ஐ.ஜி. திலகவதிஉத்தரவிட்டார். மேலும், அனைத்து ரயில்களிலும் ஆயுதமேந்திய போலீசார் செல்ல வேண்டும் என்றும்உத்தரவிட்டார்.
ரயில் கொள்ளை தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் வேலூரைச் சேர்ந்த ஒருகொள்ளைக் கும்பல்தான் இந்த ரயில் கொள்ளைகளுக்குக் காரணம் என்றும் ரயில்வே போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
