காஷ்மீரில் சண்டை நிறுத்தம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
டெல்லி:
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவுசெய்ப்படும் என தெரிய வந்துள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு ரம்ஜான் முதல் அங்கு சண்டைநிறுத்தத்தை அறிவித்தது மத்திய அரசு. அந்த சண்டை நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சண்டை நிறுத்தம் இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடையவிருப்பதால் சண்டை நிறுத்தத்தை மேலும்நீடிக்கலாமா என மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
காஷ்மீரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை நேரில் சென்று ஆராய மத்திய உள்துறை அமைச்சர்அத்வானியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் சனிக்கிழமை காஷ்மீர் சென்றிருந்தனர்.
அப்போது அவர்கள் ஸ்ரீநகரில் ராணுவ அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதன்கிழமை நடக்கவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் தாங்கள் சேகரித்து விவரங்களை அத்வானியும், ஜஸ்வந்த்சிங்கும் பிரதமரிடம் கூறுவார்கள்.
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் எல்லைப் பகுதியில் அமைதி நிலவி வருகிறது. ஆனால் தீவிரவாதிகள்தாக்குதலில் இறந்து போன பொதுமக்கள் எண்ணிக்கை 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது என உளவுத்துறை தகவல்கள்தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதால் சண்டை நிறுத்தத்தை மேலும் நீடிக்கவேண்டும் என மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications